பட்டியல் > வைப்புத்தொகை காப்புறுதி பற்றி > பாதுகாப்பு

பாதுகாப்பு
 

காப்புறுதி பாதுகாப்பு
வாணிபமாகவோ அல்லது தனிநபராகவோ இருந்தாலோ அனைத்து வைப்புப்தொகைகளும் பாதுகாக்கப்படுகின்றன. ஓர் உறுப்பு வங்கி ஒரு வைப்புத்தொகையாளர் எனும் அடிப்படையில் அதிகபட்ச வரம்பாக RM250,000 காப்புறுதி பாதுகாப்பு வழங்கப்படுகிறது. வைப்புத்தொகைகளின் மூலத் தொகை மற்றும் வட்டி/லாபம் இரண்டையும் உள்ளடக்கி இருக்கிறது. முழுமையாகப் பாதுகாக்கப்படும் நடப்பு வைப்புத்தொகைகளின் 99%-க்கு வழங்கப்படும் வரம்பு RM250,000 ஆகும். வழக்கமான மற்றும் இஸ்லாமிய வைப்புத்தொகைகளுக்கு மலேசிய வைப்புத்தொகை காப்புறுதி முறை தனித்தனி பாதுகாப்பை வழங்குகிறது.

பாதுகாப்புக்குத் தகுதிபெறும் வைப்புத்தொகைகள்
• நடப்பு மற்றும் சேமிப்பு வைப்புத்தொகை கணக்குகள்
• நிரந்தர வைப்புத்தொகை
• கூட்டு மற்றும் தர்மகர்த்தா கணக்குகள்
• வெளிநாட்டு நாணயத்திலான வைப்புத்தொகைகள்

பாதுகாப்புக்குத் தகுதிபெறாத வைப்புத்தொகைகள்
• மலேசியாவில் செலுத்தப்பட முடியாத வைப்புத்தொகைகள்
• வங்கிகளுக்கு இடையிலான பணச் சந்தை வைப்புக்கள்
• பேரம்பேசத்தக்க வைப்புத்தொகை (NIDs) மற்றும் இதர வைப்புத்தொகை வைத்திருப்போர்
• மறுகொள்முதல் உடன்பாடுகள்
• யூனிட் டிரஸ்டுகள்

கீழ்க்காணப்படும் ஒவ்வொரு பிரிவுகளிலும் வைப்புத்தொகையை வைத்திருக்கும் ஒரு வைப்புத்தொகையாளருக்கு RM250,000 வரம்பு வரைக்கும் தனி வைப்புத்தொகை காப்புறுதி பாதுகாப்பும் வழங்கப்படுகிறது:
a) இஸ்லாமிய கணக்குகள் - இந்த கணக்குகள் RM250,000 வரம்பு வரைக்கும் தனியாகப் பாதுகாக்கப்படுகின்றன.
b) கூட்டுக் கணக்குகள் - கூட்டுக் கணக்கு வைத்திருப்போரின் பெயர்கள் அடங்கிய தகவல் பதிவுகளை உறுப்பு வங்கிகள் வழங்கும் அடிப்படையில் கூட்டுக் கணக்குகள் தனி வைப்புத்தொகை காப்புறுதிப் பாதுகாப்பை அனுபவிக்கும்.
c) தர்மகர்த்தா கணக்குகள் - தர்மகர்த்தா கணக்குகளுக்கு, உறுப்பு வங்கியின் தகவல் பதிவுகளில் ஒவ்வொரு வாரிசு மற்றும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சேரவேண்டிய முறையானத் தொகை குறித்த நலனை தர்மகர்த்தா ஆண்டுதோறும் தெரிவித்தால் வாரிசுதாரர்கள் தனித்தனி பாதுகாப்பை அனுபவிப்பார்கள். தங்கள் பெயர்களில் வைக்கப்பட்டிருக்கும் காப்புறுதி செய்யப்பட்ட வைப்புத்தொகைகளில் இருந்து ஒவ்வொரு வாரிசுதாரர்களும் தனித்தனியாக RM250,000-க்கு பாதுகாக்கப்படுகின்றனர்.
d) தனிச் சொத்துடமையாளர்கள், பங்காளிகள் அல்லது நிபுணத்துவ தொழில் புரிவோர் (உதாரணம். கட்டட வரைபடக் கலைஞர்கள், பல் மருத்துவர்கள்) - இந்தக் கணக்குகளும் RM250,000 வரம்பு வரை தனித்தனியாகப் பாதுகாக்கப்படுகின்றன.

 
     



Name :  
Email :  
Message :  


மின்னஞ்சல் முகவரி


நண்பருக்கு அனுப்புங்கள்
உங்களின் தகவல் (இங்கே கிளிக் செய்யுங்கள்):
மேலும் இந்த பகுதியிள் :

வைப்புத்தொகை காப்புறுதி என்றால் என்ன?

பாதுகாப்பு

உறுப்புக் கழகங்கள் - உறுப்பு வங்கிகள் (வாணிப மற்றும் இஸ்லாமிய வங்கிகள்)

அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

கணக்கிடும் பட்டியல்


அடையாளக்குறி :

Share on Facebook